பதினெட்டு வயதில் பார்த்தவை எல்லாம்

கலாய்த்தல் நமது தொழில்

Tuesday, October 03, 2006

போலி மன்னிப்பும் 50 பின்னூட்டங்களுக்கு மேலும்..

டோண்டு ராகவன் அவர்களின் மன்னிப்புப் பதிவைப் பார்த்து எல்லாரும் அகமகிழ்ந்தோம்.. அட, இவரா?! யோம் கிப்பூர் என்ற வார்த்தையையும் தமிழ்மணத்தில் தெரிந்த அவரது பதிவின் முதல் சில சொற்களையும் பார்த்த பதிவர்கள் அத்தனை பேருமே மகிழ்ந்திருப்பார்கள் என்பது உறுதி. அதே மகிழ்ச்சியுடன் ஓடிச் சென்று அந்தப் பதிவைப் படித்த பல்வேறு அதிர்ச்சிகள் காத்திருந்தன.

பதிவின் முதல் சில வரிகள் துவங்கிய விதம் ஒரு வெளிநாட்டு விரும்பியின்(அடிவருடி என்ற வார்த்தை இன்னும் பொருத்தமானது) எண்ணங்கள் மட்டுமே. டோண்டுவின் யூத ஆதரவும் பார்ப்பனீய போக்கும் பல்வேறு பதிவர்களால் பல்வேறு தளங்களில் கண்டிக்கப்பட்ட, விவாதிக்கப்பட்ட பொழுதில், இந்தப் பதிவின் முதல் சில பத்திகள் அதைப் பற்றியவையே. இந்தச் சில பத்திகளில் சுற்றி வளைத்து ஒருவர் மன்னிப்பு என்ற விஷயத்தை நம்மிடம் சொல்ல விரும்புவாரேயானால், அதைக் காது கொடுத்து கேட்க வேண்டிய (படிக்க வேண்டிய இல்லை, கேட்க வேண்டிய) சூழ்நிலை அமையுமேயானால், சக மனிதராக நீங்கள் என்ன எண்ணுவீர்கள்? "விஷயத்துக்கு வாருமையா" என்று உங்களைப் போல் தான் எனக்கும் தோன்றியது

டோண்டு ஐயா அவர்கள் மிகவும் மதிக்கும் ஒருவரிடமிருந்து வந்த அந்தக் கடிதம் "இப்படி ஒரு பதிவை போட்டால் நீங்கள் பல நூறு மக்களின் அன்பையும் மதிப்பையும் ஈட்டிக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.உங்களுக்கு எந்த இழப்பும் கிடையாது ." - இந்த வரிகளை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். டோண்டு ஐயா மிகவும் மதிக்கும் அந்தப் பதிவர் எழுதி இருப்பது மிக மிகச் சரியாகவும், பொலிடிகல்லி கரெக்ட் எண்ணங்களாகவும் இருப்பதால், அதைப் படித்தவுடன், இப்படிக் கூட ஒருவரால் எழுத முடியுமா என்ற வியப்பு எனக்கும் ஏற்பட்டது.

அதன் பின் வந்த collateral damage-ஐயும், மன்னிப்பையும் பற்றிய பத்தியைக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே படித்து முடித்தேன்..

ஆனால், கடைசி பத்தி என் எல்லா சந்தேகங்களையும் விலக்கிவிட்டது. இந்தப் பதிவுக்கான எதிர்வினை எப்படி இருக்கும் என்பது பற்றி ஒரு தீர்மானம் அப்போதே வந்துவிட்டது. போலி யார் என்பதில் பலருக்கும் சந்தேகம் இருக்கும் நிலையில், ஒரு பதிவரை அவர் தான் போலி என்று பெருமளவில் சந்தேகிப்பதும், அதைச் சொல்லிச் சொல்லியே அவரைத் தூண்டுவதும் ஆரோக்கியமான சூழலா? இன்று போலியார் தன் அவதூறு பரப்பும் வேலைகளை விட்டு விட்டு வந்தால், இவர்கள் தமிழ்மணத்திலோ, வலைபதிவர் வட்டத்திலோ ஏற்றுக் கொள்ளப் போகிறார்களா? போலி என்று முத்திரை குத்தப் பட்டதாலேயே ஒரு பதிவருக்குப் பின்னூட்டம் போடவும், பதில் எழுதவும் மக்கள் அஞ்சுகிறார்கள் என்பது டோண்டுவுக்குத் தெரியுமா? அப்படி மக்களால் புறக்கணிக்கப் படும் மனிதனின் மனம் எப்படி இருக்கும்? இனிமேலும், அந்தப் பதிவர் பற்றி எந்த இடத்திலும் டோண்டுவோ, அவரது சகாக்களோ(விசிலடிச்சான் குஞ்சுகளோ) பேசாமல் இருப்பார்கள் என்று உத்திரவாதம் தராமல் இருப்பது கூட ஒப்புக் கொள்ளக் கூடியதே.. ஆனால், அந்த விஷயத்தில் எதிர்மறையாக நடந்து கொள்வேன் என்பது போல் தான் உள்ளது அந்தக் கடைசி பத்தி!

இத்துடன், மறுமொழிகளைப் பார்க்கும் பொத்தானை அமுக்கிப் பார்த்தேன்.. துளசி அவர்களின் பண்பான பின்னூட்டம், முத்து தமிழினியின் வாழ்த்து, இவற்றிற்குப் பின் அந்தோ.. அந்தப் பின்னூட்டம் இந்தப் பதிவின் காரணம் என்ன என்பதைத் தெள்ளென விளக்கியது! flemingo என்பவரின் அற்புதப் பின்னூட்டம்: போலியின் இ மெயில் கொடுத்தால் எல்லாரும் ஒரு 'Get well soon' கார்டு போடுகிறோம் "அடேய் பைத்தியக்காரா, உன்னை நான் மன்னித்து விட்டேன், நீயும் என்னை மன்னித்துவிடு!" என்று உங்களைப் பார்த்து ஒருவன் சொன்னால், அதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? மகிழ்ச்சியுடன், பாராட்டியா? கோபம் வரும் தானே?! போலிக்கு மட்டும் அது வராதா? அதன்பின் சொல்கிறார் "எல்லாவித எதிர்வினைகளையும் எதிர்பார்த்ததால் எனக்கு ஒன்றும் அதிர்ச்சி இல்லை."! இதன் மூலமே புரிகிறது சார், இந்தப் பதிவை நீங்கள் எதற்குப் போட்டீர்கள் என்று!

இந்தப் பதிவு போடப் பட்டதே, சரிந்து கொண்டிருக்கும் உங்கள் இமேஜைத் தூக்கி நிறுத்தவும், உங்கள் பெயரைப் பாதுகாத்துக் கொள்ளவும் தான்! இப்படி ஒரு பதிவைப் போட்டால், நூறு நூறு பதிவர்கள் தம்மை வாழ்த்துவார்கள் என்று தான் போட்டிருக்கிறார் இந்தப் பதிவை! டோண்டு உண்மையிலேயே சமாதானத்தை விரும்பி இருந்தால் செய்திருக்க வேண்டியது என்ன?பதிவைப் போடுமுன் யார் மூலமாவது போலியைத் தொடர்பு கொண்டிருக்கலாம்.. அல்லது, பின்னூட்டங்களையாவது வெளியிடாமல் இருந்திருக்கலாம்.. இப்படி ஒரு துதி பாடும் பின்னூட்டங்களுடன் கூடிய பதிவொன்றைப் பெற்றிருப்பது தான் இதன் மூலம் சாதித்திருப்பது. இதுவரை பின்னூட்டமிடப் பயந்த பலரும் கூட இந்தச் செய்கையால் ஏமாந்து பின்னூட்டமிட்டிருக்கிறார்கள்..

விசாலாட்சி, டோண்டு பேரவை, ராஜ ரிஷி சோ ரசிகன், ராபின் ஹூட் முதலானோர் யார் என்றே தெரியாது என்று சாதிக்கும் டோண்டு அவர்களே, அந்த ஆட்களின் பெயரில் தொடங்கப்பட்டிருக்கும் உங்கள் சார்பான, உங்களைச் சார்ந்தவரின் பதிவுகளைத் திரும்பப்பெறவும் அழிக்கவும் முன்வராதது ஏன்? உண்மையில் சமாதானத்துக்கான எண்ணம் இருப்பின், இதை ஒரு வேண்டுகோளாகவாவது உங்கள் நலம் விரும்பிகளான அந்தப் பதிவர்களிடம் சொல்லி இருக்கலாமே?!

எப்படியோ வலையுலக டெண்டுல்கருக்கு இன்னுமொரு ஐம்பது பின்னூட்டம்.. அத்துடன், புதிய பதிவர்களுக்கும், புதிய நடுநிலையாளர்களுக்கும் டோண்டு மீது நன்மதிப்பு!

இந்த மாதிரி தேன் தடவி எழுதுவோரின் முகமூடியைக் கிழித்தெறிய கோவாலு மாதிரி ஒரு பதிவர் இன்னமும் தேவைப்படும் சூழ்நிலையில் தமிழ்வலைப்பதிவுகளின் ஆரோக்கியத்தைப் பற்றி பொய்யான கவலைப் படும் இது போன்ற ஆட்களை எப்போது தான் திருந்தப் போகிறார்களோ!

==============================

Saturday, September 30, 2006

உயிரை கொடுக்க தயார்

தமிழகம் தந்த தவபுதல்வி இராதாராகவன் பதிவும் சூராதிசூரர் ராபினின் கடைசி இடுகையும் தமிழ்மணத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதை கண்டித்து ராபினின் ரசிகர் மன்றம் பெங்களூர் 24 ம் வட்ட கிளை ( எண் 254/2006) சார்பில் விதான்செளதா அருகில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இப்படிக்கு

கருத்து சொதந்திர கேவலாளிகள்

Thursday, September 28, 2006

டோண்டுக்களின் அட்டகாசங்கள்

தமிழ்மணத்தில் புதிதாக பதிவாகியுள்ள இராதா ராகவன் பதிவு பதிவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. பலரும் நமுட்டு சிரிப்புடன் கருத்து சொல்லாமல் நழுவுகின்றனர்.இதை பற்றி கோவாலுவின் முந்தைய பதிவு எதிர்பார்த்த குழப்பத்தை ஏற்படுத்தவில்லை. அதனால் இந்த பதிவு.

இந்த பதிவு டோண்டுவும் ராபினும் சேர்ந்து நடத்தும் போர் யுக்தியின் ஒரு அத்தியாயமா அல்லது டோண்டுவின் பின்னூட்ட போர் யுக்திக்கு போலியார்
வைத்த பதில் ஆப்பா?

வலைப்பதிவர்கள் அனானியாக வந்து கருத்து கூறலாம்.இங்கு ஐ.பி ட்ராக்கர் இல்லை.ஆகவே அடித்து விளையாடுங்கள்.ஆனால ஆபாசம் வேண்டாம் ப்ளீஸ்.ஆபாசம் சங்க விதிமுறைகளுக்கு புறம்பானது.

போர் யுக்தியாம்

இரவு கழுகார், மருதநாயகம், சாம்பு,அமானுஷ்ய ஆவி, சுமா, விடாதுகருப்பு, பார்டெண்டர், விட்டது சிகப்பு, கோவாலு, இவர்கள் இல்லை என்றால் வலைப்பூ போரடித்து விடாதா?

இந்த வார முக்கிய ஹிட் போர் யுக்தி ஹி்ம்சைகள் ரொம்ப மட்டமாக போவதுதான். தமிழ்மணத்தையும் உங்கள் அரசியலில் இழுப்பது யுக்திகளில் அடக்கமா டோண்டு ராகவன்?